சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல்; 13 பேர் கைது

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் அரச படையினரால் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் அலுவலகம் அமைந்துள்ள வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் எவரும் உள்நுழையாதபடி தடுத்த விசேட அதிரடிப் படையினர் அங்கு சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் நாற்பது அதிகாரிகள் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி 13 பேரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

ஏற்கனவே தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை நான்கு பொலிசாராக குறைத்துள்ள அரச தரப்பு தற்போது தமது அலுவலகத்தை சோதனையிட்டு கணிணி உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தம்முடன் இருந்தவர்களையும் கைது செய்து சென்றுள்ளதாகவும் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் செவ்வியை நேயர்கள் தமிழோசையின் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இதுதொடர்பாக இலங்கை அரச அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்லவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை நடவடிக்கைகள் தொடர்வதாக மட்டும் கூறினார். சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டது பற்றியோ, எது குறித்து விசாணை நடத்தப்படுகிறது என்பது பற்றியோ ஹுலுகல்ல உறுதிப்படுத்தவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply