நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்
5 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
5 மில்லியனுக்கும் மேற்பட்டமக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். இதனை நாம் முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொண்டோம். தேர்தலில் கிடைத்த மக்களின் ஆணை மோசடியாகவும் முறைகேடாகவும் மாற்றப்பட்டுள்ளது. எனினும் என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்கின்றது. நான் அதனை நன்கு அறிவேன்.
மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாத்துத் தொடர்ந்தும் செயற்படப் போகின்றேன். மக்களின் எதிர்பார்ப்புக்களைப் போன்று அவர்களின் நம்பிக்கையைப் பாது காப்பதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளேன்.அனைவரும் அன்னப் பறவையை அறிந்து கொண்டுள்ளனர். அவர்கள் அந்தப் பறவையை தேடுகின்றனர்.அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிட எண்ணியுள்ளேன் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply