தேர்தல் முடிந்தும் தொடரும் அச்சுறுத்தல்கள்: தங்கத்துரை
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள போதிலும் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் தமது கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை கூறுகின்றார்.
இதன் காரணமாக தேர்தல் காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய இரண்டு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட 4 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் இது வரை எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் இதனை தாம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவொன்றினாலே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply