இரு தசாப்தங்களின் பின்னர் ஏ-32 நெடுஞ்சாலை திறப்பு

புத்தளத்தில் இருந்து மன்னார் பகுதியை இணைக்கும் ஏ-32 நெடுஞ்சாலை 22 வருடங்களின் பின்னர் மக்களின் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

உள்நாட்டுப்போர் காரணமாக 1988 ஆம் ஆண்டு மூடப்பட்ட ஏ-32 நெடுஞ்சாலை தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியையும் புத்தளம் பகுதியையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட பின்னர் முதல் கட்டமாக 150 பேருந்துகள் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

இந்த பாதையின் ஊடாக ஆயிரம் மக்கள் பயணித்துள்ளனர்.எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பாதை காலை 8.00 மணியில் இருந்து மாலை 2.00 மணிவரையுமே திறக்கப்படும் என கடற்படை அதிகாரி லெப். கொமாண்டர் ஜெயநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏ-32 பாதையினூடாக செல்லும் போது புத்தளத்திற்கும்-மன்னாருக்கும் இடையிலான தூரம் அனுராதபுரம்-மதவாச்சி பாதையை விட 100 கி.மீ குறைந்ததாகும். எனினும் இரு தசாப்தங்களாக பயன்படுத்தப்படாததால் வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply