டெங்கு மீண்டும் வேகமாகப் பரவுகிறது; ஜனவரியில் மட்டும் 25 பேர் பலி
டெங்கு வைரஸ் காய்ச்சல் நாட்டில் பரவலாக மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்புப் பிரிவு வேண்டுகோள் விடுத்தது.
இந்த நாட்களில் எவருக்காவது இரு நாட்களுக்கு மேல் தீவிர காய்ச்சல் நிலை காணப்படுமாயின் தாமதியாது அரசாங்க ஆஸ்பத்திரிக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அப் பிரிவின் மருத்துவ நிபுணர் ஒருவர் கூறினார்.
டெங்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் 25 பேர் உயிரிழந்திருப்பதுடன், 2988 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அம்மருத்துவ நிபுணர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது டெங்கு வைரஸ் காய்ச்சல் கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, வவுனியா, புத்தளம், திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே பெரிதும் தீவிரமடைந்திருக்கின்றது.
இந் நோய் காரணமாக ஜனவரி மாதத்தில் மாத்திரம் யாழ். குடா நாட்டில் 8 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 4 பேரும், மட்டக் களப்பு மாவட்டத்தில் நால்வரும், கம்பஹா மாவட்டத்தில் இருவரும் என்றபடி உயிரிழப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதேநேரம் கொழும்பு மாவட்டத் தில் 445 பேரும், யாழ். மாவட்டத் தில் 437 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 409 பேரும், மட்ட க்களப்பு மாவட்டத்தில் 135 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 160 பேரும், வவுனியா மாவட்டத்தில் 311 பேரும் இக் காய்ச்சலுக்கு உள்ளாகி யுள்ளனர்.
அதனால் இந்நோயைக் கட்டுப் படுத்து வதற்காக சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதிலும் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதேவேளை இந் நோய் காரணமாக கடந்த வருடம் 345 பேர் உயிரிழந்ததுடன் 34 ஆயிரத்து 896 பேர் பாதிக்கப்பட்டுமுள்ளனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply