பாராளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். அரசாங்கம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். வடக்கு மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று வினாவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ளார். இந்நிலையில் வடக்கு மாகாண சபை விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வடக்கு மாகாண சபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அரசியலமைப்பின் பிரகாரம் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டியுள்ளது.
எனவே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை நிறுவப்படும். தற்போதைய நிலைமையில் கிழக்கு மாகாண சபை இயங்கிக்கொண்டிருக்கின்றமை உங்களுக்கு தெரியும். மேலும் அப்பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளும். அம்மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனையடுத்து வடக்கு கிழக்கு பகுதிகளின் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதனை தெரிவிக்கின்றேன்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply