`வடக்கின் வசந்தம்` மற்றும் `கிழக்கின் உதயம்` திட்டங்கள் தொடரும்

‘வடக்கின் வசந்தம்” வேலைத்திட்டம் மற்றும் ‘கிழக்கின் உதயம்” செயல் திட்டங்களில் எவ்விதமான ஸ்தம்பித நிலையும் ஏற்படாது என போக்குவரத்து அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளை விட அதிகமான வாக்குகளை இம்முறை தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளார். இது உண்மையில் நாங்கள் பெற்ற வெற்றியாகும்.

எதிர்க்கட்சியினர் வடக்கு கிழக்கில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் யுத்தத்தை செய்தார் என்று வடக்கு கிழக்கிலும் ஜெனரல் சரத் பொன்சேகாதான் யுத்தத்தை செய்தார் என்று தெற்கிலும் எதிரணி பிரசாரம் செய்து வந்ததையும் நாம் மறந்துவிடக்கூடாது.

எவ்வாறெனினும் தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கு ஆளும் கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும். இது தொடர்பில் எமது முக்கியமான கூட்டங்களில் ஆராயவுள்ளோம்.

இங்கு நாம் அவதானிக்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்று உள்ளது. அதாவது வடக்கு மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது நாம் அடைந்த பாரிய வெற்றியாகும்.

அம்மக்கள் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பது ஒரு விடயமல்ல. மாறாக அம்மக்கள் ஜனநாயக மற்றும் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

நாங்கள் தற்போது பொதுத் தேர்தலுக்கு தயாராகிவிட்டோம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதைப்போன்று அமோக வெற்றியை பாராளுமன்ற தேர்தலிலும் பெறுவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply