டெங்கு நுளம்பு ஒழிக்க கியூபாவிலிருந்து பிரிஐ பக்ரியாவை இறக்குமதி
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவென அரசாங்கம் ஐநூறு (500) மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
அதேநேரம், டெங்கு நுளம்பு ஒழிப்புக்கென பி.ரி.ஐ பக்ரியா நுண்ணங்கியை கியூபாவிலிருந்து தருவிக்க வும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத் திட்டங்களை விரிவான அடிப்படையில் துரிதப்படுத்தவென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் தேசிய மட்டக் கமிட்டியொன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தலைமையில், சுகாதாரக் கல்வி பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இச்செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் மஹிபால மேலும் கூறுகையில், நாட்டில் டெங்கு நோயை முழுமையான அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்கென விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்தவகையில் 40 புகை விசிறல் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு டெங்கு நுளம்புகள் பெருகும் அச்சுறுத்தல் மிக்க பிரதேச மருத்துவ அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 60 புகை விசிறல் இயந்திரங்கள் தருவிக்கப்படவுள்ளன.
இதேநேரம், டெங்கு நோயை சரியாக உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு தேவைப்படும் இரத்தப் பரிசோதனை இயந்திரங்களும் இறக்குமதி செய்யப்பட்டு அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட வுள்ளன.
நாட்டில் 61 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு நுளம்புகள் பெருகும் அதிக அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களாக விளங்குகின்றன. இப்பிரதேசங்களில் டெங்கு நும்பு ஒழிப்புப் பணிகளை முன்னெடுக்கவென ஒவ்வொரு மருத்துவ அதிகாரி பிரிவுக்கும் 15 பேர்களை உள்ளடக்கிய விசேட செயலணிகள் அமைக்கப்படவுள்ளன.
கியூபாவின் பி.ரி.ஐ. பேக்aரியா நுண்ணங்கியை பாவித்து நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவென அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய அக்குரணை, கம்பளை, கண்டி ஆகிய பிரதேசங்களில் பி.ரி.ஐ.யைப் பயன்படுத்தி நுளம்புகளை ஒழிக்கும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படும். தற்போது பி.ரி. ஐயை தருவிப்பதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளன.
டெங்கு ஒழிப்புக்கென கடந்த வருடம் ஐம்பது மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டன. ஆனால், இவ்வருடம் இதற்கென ஐநூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு தீவிரமடைந்துள்ளன. அதனால் நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழித்துக் கட்டுவதில் ஒவ்வொ ருவரும் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply