தேர்தல்கள் ஆணையர் தொடர்ந்தும் பணியாற்ற முடிவு
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க உடனடியாகப் பதவி விலகும் எண்ணத்தைக் கைவிட்டுள்ளதோடு, தொடர்ந்தும் கடமையாற்றுவதெனத் தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்துவிட்டு ஓய்வு பெறுவதைப் பற்றிச் சிந்திக்கவிருப்பதாக தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுக்காலை (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
தமது உத்தியோகத்தர்களும் சில எதிர்க் கட்சிகளும் விடுத்த கோரிக்கைகளையடுத்தே தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாராவது நீதிமன்றம் சென்றால் அதற்கு முகங்கொடுக்கத் தயாராகவே உள்ளேன். அதேநேரம் பாராளுமன்றத் தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளதால், அதனையும் நடத்திவிடத் தீர்மானித்தேன்.
தம்மை அநாதரவாக்கிவிட்டுச் சென்றுவிட வேண்டாமென உத்தியோகத்தர்கள் கூறுகிறார்கள்” என்று தெரிவித்த ஆணையாளர், எதிர்க் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட 64 வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென்றார்.
அளிக்கப்படாத வாக்குச் சீட்டுகள் அனைத்தும் பத்திரமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆணையாளர், 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேர்தல் முறை அரசியல் கலாசாரத்தையே மாற்றிவிட்டிருக்கிறது. நான் ஒரு பெளத்தன் என்ற வகையில் கூறுகிறேன்; நியாயயீனமான எந்தச் செயற்பாடும் நியாயயீனமாகவே முடியும். இந்த 1978 ஆம் ஆண்டின் அரசியமைப்பு அவ்வாறுதான் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் வீணான குழப்பங்கள் ஏற்படுகிறது” என்றும் ஆணையாளர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply