புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரை கொழும்பு கல்கிஸ்ஸ நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தனிப்பட்ட நபர்களின் குற்றச்சாட்டுக்களை மட்டும் அடிப்படையாக் கொண்டு விசாரணைகளின்றி எவரையும் கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4.8 மில்லியன் சர்வோதய நிதி மோசடி குறித்த விசாரணைகளின் போது நீதவான் ஹர்ஷ சேதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு அதிகாரி சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் வழங்கிய தகவலை மட்டும் கருத்திற் கொண்டு பௌத்த பிக்கு ஒருவரையும், பெண் ஒருவரையும் புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது செய்திருந்தார்.
எனினும், இவ்வாறான கைதுகள் கண்டிக்கப்பட வேண்டியவை என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
தவறான நபர்களை கைது செய்யக் கூடாது எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply