முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு இட ஒதுக்கீடு

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் அறிவித்துள்ளார்.

யாழ். நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய இடங்களைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் நேற்று மாலை 3.30 மணியில் யாழ். மாந கரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது 6 அங்கத்தவர்களைக் கொண்ட உப குழு நியமிக்கப்பட்டு அக்குழு சிபார்சு செய்ததன்படி முனியப்பர் கோவில் பக்கமாகவுள்ள இடத்திலிருந்து யாழ். பிரதம தபாலகத்திற்கு எதிர்ப்பக்கமாக வுள்ள பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் வியாபார நடவடி க்கை மேற்கொள்வதற்காக ஒருவருக்கு 10 தர 10 சதுரஅடி இடம் மட்டும் ஒதுக்கப்படும். இதற்கென நாள் ஒன்றுக்கு தினமும் குத்தகையாக 100 ரூபாய் அறவிடப்படுவதாகவும் ஆயிரம் ரூபாயைப் பாதுகாப்பு வைப்பில் இடவேண்டும். வியாபாரி ஒருவர் 3 நாளைக்கு வியாபாரத்தில் ஈடுபடவில்லையா யின் அவ்விடத்தை வேறு ஒருவ ருக்கு வழங்கப்படவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

வீதியின் மத்திய பகுதியில் இருந்து 50 அடிக்கு மேற்பட்ட பகுதியில் மட்டுமே வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். வியாபாரம் மேற்கொள்ளபவர் மாநகர சபையின் அனுமதி பெற்றே வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply