இலங்கை – இந்தியா இடையே ரயில் பாதை அமைக்கத் திட்டம்
இலங்கை இந்திய நாடுகளிடையே ரயில் போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழக பெரும நேற்று நாடாளுமன்றில் கூறினார். இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில் இது பற்றி ஆராயப்படும் என்று அமைச்சர் சொன்னார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு: இந்த நாட்டில் 90 வீதமான மக்கள் அரச போக்குவரத்துச் சேவையைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்போது தனி வாகனங்களில் பயணிப்பது நாகரிகமாகிரவிட்டது. ஒரு வாகனத்தில் ஒருவர் அல்லது இரண்டு பேர் தான் வருகின்றனர். இதனால் தான் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையிடம் இப்போது 4 ஆயிரத்து 800 பஸ்கள் மாத்திரமே உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் இவற்றை 5 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
இலங்கை போக்குவரத்துச் சார்பில் உயர் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம். முதலாவது தொழிற்சாலை அம்பாறையில் ஆரம்பிக்கப்படும்.
அதேபோல், இலங்கைஇந்திய நாடுகளிடையே ரயில் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில் இது தொடர்பாக ஆராயப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply