இந்து மாமன்ற பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு

யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதகாவும் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி, இந்த பிரதான வீதியில் உள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்க ப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ். இந்து மக்களும் இந்து நிறுவனங் களும் அதிர்ச்சியடைந்த நிலையில் இது விடயத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாக இந்து மாமன்றத் தலைவரும் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபைத் தலைவருமான வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபையின் பொருளாளார் திருமதி அ. கயிலாசபிள்ளை ஆகியோர் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியை 5ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் அவசரமாக சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளார் கள்.

வீதி விஸ்தரிப்பு திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும் அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்பு திட்டத்தை மாற்றியமைத்து யாழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக் கும்படியும் அந்த மகஜர் ஊடாக வேண் டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ். பல்கலைக்கழக சமூகத்துடனும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோ சித்து இது விடயத்தில் நல்ல முடிவை எடுக்கும்படியும் கேட்டுகொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply