உலக நாடுகளின் முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தைக் கேந்திரமாக மாறி வருகிறது: லுமும்பா பல்கலைக்கழக விழாவில் ஜனாதிபதி

வியாபார உலகில் நாம் இப்போது கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது. சக்தி, மனித வளம், வங்கி நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான எதிர்கால திட்டங்கள் ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் வறுமை பிரச்சினையும் குறைந்து வருகிறது.

அது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் நாம் வளர்ந்து வரும் நடுத்தர வருமானத்தை பெறும் சந்தையை கொண்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் உலக நாடுகளின் பல்வேறு முதலீடுகளில் இலங்கை பிரபல சந்தை கேந்திரமாக மாறி வருகிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கெளரவ டொக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததையடுத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவ ருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும்.

இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு உலகிலும் கொடூரமான புலிகள் பயங்கரவாத சவால் மக்களின் அமைதி, செளபாக்கியம் மட்டுமன்றி உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பயங்கர வாதிகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே நாம் யுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பணயக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்திருந்த பொது மக்களை பாதுகாக்க நாம் மனிதாபிமான நடவடிக்கையில் இறங்கினோம்.

இதனையடுத்து நான் உங்கள் முன் மக்கள் ஆணையை மீண்டும் கேட்டேன். நியாயமான அமைதியான தேர்தல் மூலம் சில தினங்களுக்கு முன் உங்களால் தெரிவாகிய நான் இன்று இலங்கையின் 6வது ஜனாதிபதியாக உங்கள் முன் தோன்றுகிறேன்.

அந்த தேர்தலில் எதிர்க்கட்சியினால் மேற்கொண்ட வன்முறைகளுக்கு மத்தியில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் முன்னேற்றம் கருதி மக்கள் 58 சதவீத அதிக வாக்குகளால் என்னை மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி என்ற ரீதியில் இது வரை இருந்ததற்கு மேலான இடத்துக்கு எனது நாட்டை கொண்டு செல்ல எனக்கு முடிந்திருக் கிறது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது பொருளாதார நிலை கடந்த நான்கு வருடங்களில் மேலும் வலுவடைந்துள்ளது.

அத்துடன் மக்களின் சமூக கலாசாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் எமது நிலையில் முன்னேற்றத்தை காண முடிகிறது.

இலங்கை மக்கள் என் மீது வைத்துள்ள விசுவாசத்தையிட்டு நான் என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனது 40 வருட கால அரசியல் வாழ்க்கை முழுவதும் இருந்து வந்துள்ளது.

நாட்டை ஐக்கியப்படுத்தியதையடுத்து நாட்டு மக்களின் மன வேதனையை தீர்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது எனது பூரண நம்பிக்கை.

எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். நட்புறவு பல்கலைக்கழகமானது பல்வேறு இன, வர்க்க, மற்றும் மதங்களை சேர்ந்தவர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாவான பட்ரிக் லுமும்பாவின் உன்னத நோக்கம் ஒருவரின் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் அவருடன் நட்புறவை பேணுவதாகும். எதிர்காலத்தில் முகம் கொடுக்க நேரும் பாரிய சவாலின் போதும் நான் இந்த கொள்கையையே பின்பற்றப் போகிறேன்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உயர்ந்த மட்ட பல்கலைக்கழக கல்வியை மனித குலத்துக்கு வழங் கும் உன்னத சேவை பங்களிப்பினை மேற்கொள்ளும் நிறுவனமான நட் புறபு பல்கலைக்கழத்தின் 50 ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் சந்தர்ப் பத்தில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

அத்துடன் எனது இளைய சகோதரர் இந்த சிரேஷ்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்று கூறிக் கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

அத்துடன் 70ம் ஆண்டுகளில் இந்த உன்னத பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும் என்று ஜனாதிபதி அங்கு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply