இந்திய தொழில்நுட்பத்தில் தயாராகும் அணு நீர்மூழ்கிக் கப்பல்- அரிஹந்த்

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ‘அரிஹந்த்’ அணு நீர்மூழ்கிக் கப்பல், 2 ஆண்டு சோதனைக்குப் பிறகே கடற்படையில் சேர்க்கப்படும் என இந்திய கடற்படை தளபதி நிர்மல் சர்மா கூறினார்.

இராணுவ போர் தளவாடங்கள், விமானங்கள், போர்க் கப்பல்கள் போன்றவற்றுக்கு வெளிநாடுகளை மட்டுமே இந்தியா நம்பி இருந்த காலம் மலையேறி விட்டது.

இந்திய மத்திய அரசின் தீவிர முயற்சியால், நமது ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள், டாங்குகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், அதிநவீன ஏவுகணைகள் போன்றவை உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், கடற்படைக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘அரிஹந்த்’ என்ற அணு நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை’ என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. அதனால், எதிரிகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதில் இருந்து தப்பிக்கும் நவீன தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கிய த்துவம் கொடுத்து, அரிஹந்த் அணு நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நீர், நிலம், வானம் ஆகிய மூன்று வகையான தாக்குதலில் இருந்தும் தப்பித்து, பதிலடி கொடுக்கும் வகையில் இதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நீர்மூழ்கிக் கப்பலை கடற்படையில் சேர்ப்பது தொடர்பாக ராணுவ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கடற்படை தளபதி நிர்மல் சர்மா கருத்து கூறி இருக்கிறார். அதில், ‘‘அரிஹந்த் அணு நீர்மூழ்கிக் கப்பலை கடற்படையில் முழுமையாக சேர்க்க 2 ஆண்டுகளுக்கு மேலாகும்.

முதல் 2 ஆண்டுகள் இந்த கப்பல் சோதனை அடிப்படையில் இயக்கப்படும். அப்போது, கப்பலின் போர்த்திறன், தொழில்நுட்ப செயல்பாடு உட்பட பல்வேறு அம்சங்கள் முழுமையாக பரிசோதிக்கப்படும். ஏனெனில், இந்த கப்பலின் செயல்பாட்டை பொருத்தே அடுத்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply