அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் தனித்துப் போட்டி

அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில மாவட்டங்களில் கட்சியின் சின்னமான வாள் சின்னத்தில் போட்டியிடத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

சில மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தும், சில மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாள் சின்னத்தில் போட்டியிடுவது பொருத்தமானதாக அமையும் என கருத்து வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 250,000 தமிழ் வாக்காளர்கள் இருப்பதாகவும், 80000 முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலான தமிழ் மக்கள் வாழும் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஆசனமொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் இது குறித்த கலந்தாலேசிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply