தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து வேலை செய்ய அரசு தயார்
இலங்கை அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எவ்வித நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட அரசு தயாராகவில்லை எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply