புலிகளின் யுகத்தில் கூட்டமைப்பு விட்ட பிழைகளை மீண்டும் விடக்கூடாது
ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ஷ வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் யுகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட பிழைகளை மீண்டும் விடக் கூடாது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தேடித்தரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடந்த தேர்தலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பெருந்தொகையான மக்கள் ஆதரித்துள்ளமை, அவரது தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகிறது.
எனவே ஜனாதிபதியுடன் இணைந்தே சிறுபான்மை மக்களின் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யுகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட பிழைகளை மீண்டும் விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply