யானைச் சின்னத்தில் ஜேவிபி போட்டியிடாது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஜே.வி.பி. தயராகவுள்ளதாகவும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்த சில தினங்களில் தீர்மானிக்க உள்ளதாகவும் ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்ற தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஆதரித்ததாகவும் அவருக்கு ஆதரவு வழங்க பல கட்சிகள் முன்வந்தன எனவும் அன்னப்பறவைச் சின்னம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே அந்த கட்சிகக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மேற்கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில் தமது கட்சி முனைப்புகளை மேற்கொள்ளும். ஐக்கிய தேசியக் கட்சி யானைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தனது நிலைப்பாட்டை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply