வடக்கின் வீடமைப்புக்கு 8 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியா உதவி
வடக்கில் மீள் குடியேற்றப்படும் மக்களுக்காக மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
அதன்படி மீள் குடியேற்றப்படும் மக்களின் வீடுகளை அமைப்பதற்கு உதவும் வகையில் 800,000 சீமெந்து மூடைகளை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திட்டத்திடம் இன்னும் சில தினங்களில் இந்த சீமெந்துத் தொகை வழங்கப்படவுள்ளது. வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply