கொழும்பு பங்குச் சந்தை வரலாறு காணத உச்சத்தில் நேற்று

வரலாறு காணத உச்சத்தில் நேற்றைய கொழும்பு பங்கு சந்தை சுட்டெண் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நேற்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 2.58 பில்லியன் ரூபாய்.

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி, அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 2.23 சதவீதம் (82.65 புள்ளி) உயர்ந்து 3,789.37 புள்ளியில், மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 2.45 சதவீதம் (104.57 புள்ளி) உயர்ந்து 4,373.75 புள்ளியில் கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினம் மூடப்பட்டுள்ளது. .

திங்கட்கிழமை தேறிய வெளிநாட்டு விற்பனை 126.5 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 587.2 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 713.7 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி செய்தியுடன் தொடர்புடைய முன்னைய செய்திகள்;

பிரபாகரனின் மரணச் செய்தியால் எகிறியது கொழும்பு பங்கு சந்தை

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply