பொன்சேகாவின் கைது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்குமாம்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. யுத்த அனர்த்தத்திலிருந்து மீண்டும் இலங்கைச் சமூகத்தில் இந்த சம்பவம் பிளவினை ஏற்படுத்தக் கூடுமென அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு அமைவான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க குடியுரிமை காணப்படுகின்றமையை அடிப்படையாகக் கொண்டு இந்த பிரச்சினை அணுகப்பட மாட்டாதென அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜனநாயக முறைமைக்கு உட்பட்ட வகையிலான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக ஜெனரல் பொன்சேகா குற்றம் சுமத்தி வருகின்ற போதிலும், தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெற்றதாக மேற்குலக அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply