பாராளுமன்றத்தின் ஆறாவது ஆயுள் காலம் நிறைவு
இலங்கை பாராளுமன்றத்தின் ஆறாவது ஆயுள் காலம் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடும் நோக்கில், குறித்த அறிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி அளவில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் லூசியான் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வேட்பாளர்களை தெரிவதில் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply