2020ல் உலகில் 2வது மிகப் பெரிய பொருளாதார சக்தி இந்தியா

பொருளாதார ரீதியிலும், அறிவு சார் வளர்ச்சியிலும், அறிவியல் வளர்ச்சியிலும் இந்தியா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. 2020ம் ஆண்டில் இந்தியா உலகின் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று துருக்கி அதிபர் அப்துல்லா குல் தெரிவித்துள்ளார்.

அப்துல்லா குல் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் அமிட்டி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவுடன் பல்வேறு துறைகளி்ல உறவுகளையும், நட்பையும், கூட்டுச் செயல்பாட்டையும் வலுப்படுத்திக் கொள்ள துருக்கி ஆர்வமாக உள்ளது.

ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கு் இடையிலான பல்வேறு திட்டங்களை பரிமாறிக் கொள்ளும் ஊடகமாக துருக்கி விளங்குகிறது.

இந்தியாவுடன் கட்டுமானம், மின் சக்தி, அறிவியல், தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளில் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

2020ம் ஆண்டில் இந்தியா உலகின் 2வது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்.

பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தை எட்டுவதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பு இந்தியாவும் சரி, துருக்கியும் சரி மிகப் பெரிய அளவில் ஆதரிக்கின்றன என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு ஒற்றுமை ஆகும் என்றார் குல்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply