மொழியால் மட்டுமே அன்றி இந்தியாவை ஒன்று சேர்க்க முடியாது
இந்தியாவை அரசியலோ, வணிகமோ, மதமோ ஒன்றிணைக்காது என்றார் கவிஞர் வைரமுத்து.
இந்திய ஒலி-ஒளிபரப்பாளர் சங்கம், சென்னை எஸ்.பி.ஐ. ஆகியவற்றின் சார்பில் “பொன்னொளிர் பாரதம்’ என்ற தலைப்பில் தேசிய கவியரங்கம் சென்னை வானொலி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, காஷ்மீரி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளி, ராஜஸ்தானி, சிந்தி, உருது ஆகிய 14 தேசிய மொழிகளின் கவிதைகள் வாசிக்கப்பட்டன. இவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்பும் உடனுக்குடன் வாசிக்கப்பட்டது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கவியரங்கைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
பல மொழிகள் பேசுவோரை ஒருங்கிணைத்து, புகழைத் தேடிக் கொண்டுள்ளது வானொலி நிலையம். 14 தேசிய மொழிகளைப் பேசும் மக்கள் சென்னையில் வசிப்பது தமிழகத்துக்குப் பெருமையாக உள்ளது.
2 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டன என்றாலும் கூட, ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என மூன்றும் இருப்பது தமிழில் மட்டும்தான்’ என்றார்.
கவியரங்கத்துக்குத் தலைமையேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
தாய் மொழி கண் போன்றது. பிற மொழிகள் கண்ணாடி போன்றவை. கண் இல்லாமல் கண்ணாடிக்குப் பயனில்லை. மொழிகள் வேறாக இருந்தாலும், அவற்றுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை கவிஞர்கள் வாசித்த கவிதைகள் மூலம் அறிய முடிகிறது.
அரசியல், மதம், வணிகம் போன்றவற்றால் இந்தியாவை ஒன்று சேர்க்க முடியாது. மொழியால் மட்டுமே முடியும்’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply