சரத் பொன்சேகா வழக்கை விசாரிக்க 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு
இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய 5 பேர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளார். இந்த விசாரணைக் குழுவில் கடற்படை மற்றும் விமானப் படை அதிகாரிகள் உள்ளடங்குவதாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் போது தமது சார்பில் சட்டத்தரணி அல்லது இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரை பொன்சேக்கா தெரிவுசெய்ய முடியும். சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை போர் குற்றங்கள் குறித்து தான் சாட்சியமளிக்க போவதாக பொன்சேக்கா விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் இராணுவ அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னர் சில யுத்த தோல்விகள் குறித்தும் சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply