சுகாதார சேவையில் முறைப்பாடுகள் செய்ய துரித தொலைபேசி வசதி
பொது மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் அவர்களிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் துரித தொலைபேசி அழைப்புக்கான மூன்று எண்களை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த அவசர அழைப்பின் மூலம் பொது மக்களும் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் சுகாதரா உயர் அதிகாரிகளுக்கு தமது குறைகளை முறையிடலாம்.
சிகிச்சையில் புறக்கணிப்பு, மருந்துத் தட்டுப்பாடு, மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடம் தொடர்பான தகவல்களை 24 மணி நேரமும் இயங்கும் இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முறையிடலாம்.
உடனுக்குடன் இந்த முறைப்பாடுகளை உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply