டாக்டர் லியம் பொக்ஸ் இலங்கை வருகிறார்

பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டி கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் லியம் பொக்ஸ் இவ்வார இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா கொன்சவேட்டி கட்சியின் நிழல் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் லியம் பொக்ஸ் அவர்களின் பயணத்தின் முக்கிய நோக்கம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் சமரசம் பேசி ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவருவதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

30 வருட உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கை மீதான மேற்கத்தைய நாடுகளின் இறுக்கத்தை தளர்த்த உதவும் வகையில் டாக்டர் லியம் பொக்ஸ் விஜயம் அமையுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் டாக்டர் லியம் பொக்ஸ் குறிப்பிடத்தக்க சினேகித பூர்வமான அரசியல் உறவில் இருப்பவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply