வடக்கு கிழக்கு ரயில் பாதை புனரமைப்புக்கு பாரிய நிதி கிடைத்துள்ளது
உள்நாட்டு யுத்தத்தினால் சீர்குலைக்கப்பட்ட வடக்கு கிழக்கின் ரயில்வே பாதைகளின் திருத்த வேலைகளைப் போக்குவரத்து அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பாரிய நிதி உதவியை வெளிநாடுகளிடமிருந்து கிடைத்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப் பெருமா தெரிவித்தார்.
ஏற்கனவே வடக்கு கிழக்கு ரயில்பாதைகளைத் திருத்தி அமைக்கும் பணிக்கு இந்தியா மேலதிக உதவிகளை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
30 வருட கால உள்நாட்டு யுத்தம் கடந்த வருடம் மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. உள்நாட்டு யுத்தத்தினால் ரயில் பாதைகளைப் பாரியளவில் சிதைந்து போனது.
தற்போது அரசாங்கம் ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ ஆகிய திட்டங்களினூடாக, போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply