பொன்சேகா கைது குறித்து போகொல்லாகம இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

இராணுவத் தளபதியாக பணிபுரிந்த சரத் பொன்சேகா தமது சேவைக்காலத்தில் அவரது கடமைகளுக்கு முரண்பாடான வகையில் செயற்பட்டமைக்கான வலுவான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் இருந்தமையினாலேயே பொன்சேகா கைது செய்யப்பட்டாரென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

இவ்விடயம் சம்பந்தமான உண்மையான சூழ்நிலைகளை அறிந்திராத சிலர் இக் கைதானது அரசியல் பழிவாங்கலென கருதுகின்றனர். எனினும் உண்மைகள் இத்தகைய ஆதாரமற்ற முடிவுகளுக்குச் சாட்சி பகராது எனவும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, அரசாங்கம் விரும்பியிருந்தால் பொன்சேகா அரசியலில் பிரவேசிப்பதைத் தடுத்திருக்க முடியும்.

அவர் அரசியலில் புக முடியாதவாறு அவரது சேவை விலகல் விண்ணப்பத்தை மறுத்திருக்க முடியும். அல்லது அதனைத் தாமதப்படுத்தியிருக்கவும் முடியும். பொன்சேகா பதவி விலகுவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதான எதிர் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத்தான் என முழுமை யாகத் தெரிந்திருந்தும் ஜனாதிபதி அவ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply