எதிர்க்கட்சிகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகளின் சதியைக் கண்டித்து நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இப்பேரணியில் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தமது பூரண ஆதரவையும் தெரிவித்தனர்.
ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா, தொழிற்சங்கவாதியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர ஆகியோரது தலைமையில் சகல துறைகளையும் சார்ந்த 80ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இப்பேரணியில் கலந்து கொண்டதுடன் அவர்கள் சரத் பொன்சேகாவையும் எதிர்க்கட்சிகளையும் கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.
இராணுவத்தையும் நாட்டையும் காட்டிக் கொடுத்த அமெரிக்கப் பிரஜையான சரத் பொன்சேகா தேசத்துரோகி “என். ஜீ. ஓ. வின் கைக்கூலிகளாகச் செயற்படும் எதிர்க் கட்சியினரின் சூழ்ச்சிகளுக்கு உகந்த பாடம் புகட்ட வேண்டும்” “ஜனாதிபதிக்கே எங்கள் ஆதரவு” போன்ற கோஷங்களையும் பேரணி யில் கலந்து கொண்டோர் எழுப்பினர்.
அமைச்சர் காமினி லொக்குகே பேரணியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கருத்துத் தெரி வித்த போது; ஜனாதிபதியின் நடவடிக்கைகளை சரியானதென மக்கள் ஏற்றுக்கொண்டமையை இங்கு திரண்டுள்ள சனத்திரள் நிரூபிக்கின்றது எனத் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் திசைதிருப்ப முயல்கின்றனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply