விசாரணைகளுக்கு ஒத்துழைக்க சரத் பொன்சேகா மறுப்பு

ஜெனரல் சரத் பொன்சேகா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்புத் தெரிவித்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்ற செயல்கள் தொடர்பில் இராணுவ அதிகாரிகளின் முன்னர் சாட்சியமளிக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு விடுக்கப்பட்ட உத்தரவினை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை கவிழ்க முயற்சித்தல், ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் ஜெனரல் சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ளது.

தாம் ஓர் பொதுமகன் எனவும், இராணுவ நீதிமன்றின் முன் கருத்துக்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இராணுவப் படையின் இரண்டாம் நிலை அதிகாரி தயா ரட்நாயக்கவின் முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு பொன்சேகாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது குறைந்த தரத்தையுடைய அதிகாரிகளினால் விசாரணை நடத்தப்பட முடியாது என்ற காரணத்தினால் ஓய்வு பெற்ற படையதிகாரிகள் இருவரை விசாரணைக் குழுவில் உள்ளடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply