யானை சின்னத்தில் ஐ.தே.க. போட்டி. கூட்டமைப்பிற்கு வருத்தம் ஏன்?

வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜன நாயக மக்கள் முன்னணியான மனோ கணேசனின் கட்சியும் போட்டியிட கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தினை ஐக்கிய தேசிய கட்சியும், மனோ கணேசனும் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பாக தமது கட்சி எடுக்கும் தீர்மானத்தின் படியே முடிவு எடுக்க முடியும் எனவும் கட்சியின் முடிவு கூட்டமைப்பின் ஆலோசனைக்கு மாறாகவே இருக்கும் எனவும் நழுவல் வழுவலாக கூறியுள்ளனர் ரணில் விக்கிரமசிங்காவும் மனோ கணேசனும்.

இதனால் கூட்டமைப்பு மனம் சோர்ந்து போயுள்ளனராம்.

ஜனாதிபதி தேர்தலில் நாம் உதவியதற்கு இதுதானா பிரதியுபகாரம் என மனசுக்குள் புளுங்கியதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் கூட்டமைப்பு கவலையடைந்துள்ளதாம். அவசரப்பட்டு ரணில் முடிவு எடுத்து விட்டாராம்.

சிறு பான்மை கட்சியினை நம்பி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை இழக்க ரணில் இனியும் தயாராக இல்லை என்பதே இதன் அர்த்தம். ஆனால் இதனை புரிந்தும் புரியாதது போல மீண்டும் மீண்டும் ரணில் இடம் ஓடும் படலம் இன்னும் ஏன்?

ஒருபக்கம் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை செய்ய தயாராக இருப்பதாகவும் இன்னொரு பக்கம் ரணில் உடன் கூட்டு சேரலாம் எனவும்கதைத்துக்கொண்டிருப்பது கூட்டமைப்பிற்கு இராஜ தந்திரமாக இருக்கலாம். ஆனால் சிங்கள தலைவர்களுக்கு இது புளித்துபோனதொன்று.

தெட்ட தெளிவாக வடக்கு கிழக்கில் தனித்து நின்று யாரையும் நம்பாது யாருடனும் கூட்டு சேராது போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிக்கு வருபவர்களுடன் கால அட்டவணை அடிப்படையில் பேரம் பேசி தமிழர்களுக்கு முடிந்தால் எதையாவது பெற்றுக்கொடுப்பதே நல்லது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply