தற்கொலையில் `தமிழர்` முதலிடம்
கொள்கை ரீதியாகவும், பிறர் மீது வைத்துள்ள பாசம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்வோரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
‘Accidental Deaths and Suicides in India 2008’ என்ற பெயரில் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது இந்த காப்பகம்.
அதில், நாட்டில் தினசரி ஒருவர், கொள்கை ரீதியாகவோ அல்லது யார் மீதாவது கொண்ட வெறித்தனமான அன்பின் காரணமாகவோ தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் கொள்கை ரீதியாக அல்லது மற்றவர்கள் மீது கொண்ட வெறித்தனமான அன்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 392 ஆகும்.
இது கடந்த 2007ம் ஆண்டில் 261 ஆகவும், 2006ல் 289 ஆகவும் இருந்தது.
2008ல் தற்கொலை செய்து கொண்ட 392 பேரில் 232 பேர் ஆண்கள் ஆவர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 191 பேர் ஆவர். இவர்களில் 73 பேர் பெண்கள்.
ஹரியானா 134 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் பஞ்சாப் (28), மத்தியப் பிரதேசம் (14), குஜராத் (11), ஆந்திரா (8), அஸ்ஸம் (2), உ.பி. (1) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply