உலகில் சிறந்த இராணுவமாக மாறிய இலங்கை இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டதன் காரணமாக அந்த இடத்தை இழந்துள்ளது
உலகில் சிறந்த இராணுவமாக மாறிய இலங்கையின் இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டதன் காரணமாக அந்த இடத்தை இழந்துள்ளதென பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப் பட்டுள்ளமை குறித்து அவரிடம் கேட்டபோதே இதனைக் கூறியுள்ளார்.
இராணுவம் அரசியலில் ஈடுபடமுடியாது. ஜெனரல் பொன்சேக்கா பெரும் தவறு இழைத்துள்ளார். அவர் இராணுவத்தில் சேவையாற்றும் போதே இரகசியமாக அரசியலில் ஈடுபட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் அரசியலில் ஈடுபட்டது பாரிய தவறு. ஆர்ப்பாட்டங்களை நடத்தும் எவருக்கும் இதனைப் புரிந்துகொள்ளவில்லை. தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும். விசாரணைகளின் அடிப்படையில் அவர் குறித்த உண்மை நிலைமை வெளியாகும் எனவும் கோதாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply