`கூட்டமைப்பு`டன் இணையும் திட்டம் `கூட்டணி`க்கு இல்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவுமில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடக் கூடிய சாத்தியம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டால் அது வரவேற்கக்கத் தக்கது எனவும் கட்சியின் பாராளுமன்ற உப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் அப்பாவி தமிழ் பொதுமக்கள் அழிவுகளை எதிர்நோக்கியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பொறுப்பாளிகள் என அவர் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பொதுமக்களை பயன்படுத்திய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை தட்டிக் கேட்கத் தவறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply