கோர்டன் வைஸின் கருத்துக்கு ஐ.நா பொறுப்பல்ல
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் ஆஸ்திரேலிய நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹனே தெரிவித்தார்.
பெரும் எண்ணிக்கையான சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துத் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, கொல்லப்பட்ட சிவிலியன்கள் தொடர்பான விபரங்கள் தம்மிடம் இல்லை எனவும் நீல் பூஹனே குறிப்பிட்டார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply