சரத் பொன்சேகா அரசுக்கு எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டது உண்மை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசுக்கு எதிராகச் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தனது ஆய்வின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக அரசியல் பிரிவின் பேராசிரியர் லக்சிறி பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் கூறுகையில்,

இந்தச் சதியின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. இவ்வாறான சதி முயற்சிகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பதற்கு பல சரித்திரச் சான்றுகள் உள்ளன. முன்னாள் இராணுவத் தளபதி மக்கள் விடுதலை முன்னணியினுடன்தான் மிகவும் நெருக்கமாக தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில்தான் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இதைச் சாட்டாகவைத்து நாட்டில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கின்றனர். மக்கள் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply