தனுனவின் தாயாரிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு
ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் அசோக திலகரத்னவிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். காவற்துறை ஊடகப்பேச்சாளர் எஸ்.பி. பிரசாந்த ஜயகொடி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுக திலகரத்னவின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த 75 மில்லியன் ரூபா பணத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனார்.
தனுத்த திலக்கரத்னவின் தாயார் அசோகா திலகரத்னவின் பெயரிலேயே வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் இந்தப் பணம் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறைப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் பிரசாத் ஜெயக்கொடி தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார். கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றப்பட்ட அனுமதிக்கமைய கொழும்பிலுள்ள தனியார் வங்கியிலுள்ள தனுகவின் தாயாரான அசோகா திலகரத்னவின் நான்கு பாதுகாப்புப் பெட்டகங்களும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது இந்தப் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 527 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், இலங்கை நாணயமாக 15 மில்லியன் ரூபாவாக மொத்தம் 75 மில்லியன் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து பெருந்தொகையான பணம் அவருக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது? எந்த வகையில் அந்தப் பணம் தனுகவின் தாயாரது பெயரில் வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டது போன்ற விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறைப் பேச்சாளர் பிரசாத் ஜெயக்கொடி மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply