நிரந்தர நண்பர்களோ பகைவர்களோ அரசியலில் இல்லை: ஜனாதிபதி

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவர்களும் இல்லை. காலத்தின் தேவையை அடையாளம் கண்டு அதற்காகச் செயற்படுவதே பொறுப்புணர்வுள்ள ஒரு நல்ல அரசியல்வாதியின் முக்கிய கடமையாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். பேரியல் அஷ்ரப் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்இணைந்துகொண்ட வைபவம் இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு அவர் தொடர்;ந்தும் உரையாற்றுகையில்,

தமது விழுமியங்களைப் பாதுகாத்துக்கொண்டு ஏனைய சமூகத்தவருக்கும் மதிப்பளித்து நல்லிணக்கத்தோடு வாழ இலங்கை மக்கள் இப்போது ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள ~நுஆ| எடுத்த தீக்மானம் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

அமைச்சர் பேரியல் அஷ்ரப் இங்கு உரை நிகழ்த்துகையில்,

உலகத்திலேயே மிகவும் பலம்கொண்டிருந்த பயங்கரவாதிகளைத் தோற்கடித்து நாட்டுக்கு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க தலைமை தாங்கிய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது முழு ஆதரவையும் வழங்கும் முகமாகவே இந்த முடிவுக்கு நாம் வந்தோம்.

நாட்டை மேலும் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் அவர் தலைமை வகிக்கும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தவேண்டியது நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும் என்றும் கூறினார்.

அமைச்சர்; பேரியல் அஷ்ரபும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து கட்சி அங்கத்துவ உரிமை அட்டையை பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply