29 சுயேச்சைக் குழுக்கள் நேற்றுவரை கட்டுப்பணம்
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை 29 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.புத்தளம் மாவட்டத்தில் ஒரு சுயேச்சைக் குழுவும், அம்பாறையில் 4 சுயேச்சைக் குழுக்களும், கொழும்பில் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் வவுனியாவில் மூன்று சுயேச்சைக் குழுக்களும், குருணாகலில் 2 குழுக்களும், யாழ்ப்பாணத்தில் இரண்டு குழுக்களும், கம்பஹாவில் 5 குழுக்களும், கண்டியில், கேகாலையில், மாத்தளையில் தலா ஒரு சுயேச்சைக் குழு வீதமாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
மட்டு. மாவட்டத்தில் நூறு முகம்மது ஜமால்தீன் என்பவரின் தலைமையில் ஒரு சுயேச்சைக் குழுவும் தம்பிலெவ்வை ஜெளபர் கான் தலைமையில் மற்றுமொரு சுயேச் சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று நண்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவத ற்காக நேற்று வரை 4 சுயேச்சைக் குழு க்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply