இலங்கை முழுவதும் யானைச்சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் வடக்கு,கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ்போட்டியிடத்தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டரங்கள் இன்று தெரிவித்தன. ஆசன ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட வேண்டியதன் காரணமாக  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலருக்கு  போட்டியிடக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்காது  என்றும் அஞ்சப்படுகிறது.

அம்பாறை,கொழும்பு கண்டி ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆசனங்களை ஒதுக்குவதில் முரண்பாடுகள் எழுந்துள்ளதாகவும் தமிழ் மிரர் இணையதளத்துக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வடமாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமா என்பது குறித்தும் இதுவரை  முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply