யாழ்.மாவட்ட தேர்தல் களத்தில் மகேஸ்வரனின் குடும்பம்

 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான தியாகராஜா மகேஸ்வரனின் துணைவியார் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர் தியாகராஜா துவாரகீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக எமது இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவித்த ஐ.தே,க.வின் யாழ்,.மாவட்ட அமைப்பாளர் சத்தியேந்திரா,” இம்முறை பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 12 பேர் போட்டியிடவுள்ளன்ர்.இவர்களுள் 9 பேர் தெரிவு செய்யப்படுவர் ஏனைய 3 பேரும் தேசியப் பட்டியலில் இடம்பெறுவர்.

அதேவேளை யாழ். மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் பாரியார் விஜயகலா மகேஸ்வரன் ,மற்றும் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகீஸ்வரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஆளும் ஐ.ம.சு.மு. சார்பில் தியாகராஜா மகேஸ்வரனின் மற்றொரு சகோதரர் தியாகராஜ பரமேஸ்வரன் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் பிரதான வேட்பாளராக ஐ.தே,க.வின் யாழ்,.மாவட்ட அமைப்பாளர் சத்தியேந்திரவையா அல்லது விஜயகலா மகேஸ்வரனையா நிறுத்துவது என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அந்தப் பட்டியலில் ஐ.தே. கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.சத்தியேந்திரா, சிறீ தாமோதரா, கே.லவக்குமார், எம்.குலேந்திரராஜா, ரி.கிருபைதாசன் மற்றும் இரு முஸ்லீம் வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த சென்று ஆவணங்களில் கையெழுத்திட்ட பினனர் யாழ். செயலகத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply