கிளிநொச்சி நீதி மன்றம் மார்ச் முதல் இயங்கும் ஜனாதிபதி செயலகம் அறவித்துள்ளது
கிளிநொச்சி நீதி மன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறவித்துள்ளது. நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் கிளிநொச்சிக்கான மாவட்ட நீதிபதியாக எஸ். சிவகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கிளிநொச்சி நீதி மன்றக் கட்டடப் பணிகள் முடிவடையும் வரை அவர் தற்காலிகக் கட்டம் ஒன்றில் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதி மன்ற அதிகாரிகளும் உத்தியோகஸ்தர்களும் கிளிநொச்சியில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர். இது பின்னர் முல்லைத்தீவுக்கும் விஸ்தரிக்கப்படும்.
புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு தசாப்த காலமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிPதிமன்றச் செயற்பாடுகள் ஸதம்பிதம் அடைந்தன. அங்கு புலிகளின் நீதி மன்றங்கள் இயங்கின. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கில் சிவில் நிருவாகத்தை சீரமைக்கும் நோக்கில் மேலும் பல நீதி மன்றங்களை வடக்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply