ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு பொன்சேகாவால் நிராகரிப்பு ஐ.தே.க. ஆதரவாளர் திகைப்பு

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிட வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.நேற்று முன்தினம்  திருமதி அனோமா பொன்சேகாவைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடு மாறு முன்னாள் ஜெனரல் பொன் சேகாவுக்குக் கூறுமாறு கேட்டுக்கொண் டுள்ளார். ஜே. வி. பி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே ரணில் விக்கிரம சிங்க அவசர அவசரமாக திருமதி பொன்சேகாவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.எனினும், ரணில் விக்கிரமசிங்க வின் கோரிக்கையை சரத் பொன் சேகா நேற்று நிராகரித்ததாகத் தக வல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக மேடையேறிய சரத் பொன்சேகா வும், ரணில் விக்கிரமசிங்கவும் வெவ் வேறு கட்சிகளில் ஒரே மாவட்டத் தில் களமிறங்குவதால் ஐ. தே. க. வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்ப தென்று தீர்மானிப்பதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்கள். இதனால் எதிர்க் கட்சித் தலைவரும் கதிகலங் கிப் போயுள்ளாரெனத் தெரிவிக்கப் படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply