இலங்கைக்கான பயணத் தடையை சவுதி நீக்கியது
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்கு சவுதிப் பிரஜைகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாட்டை சவுதி அரேபியா அரசாங்கம் தளர்த்தியுள்ளது.சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. புலிகளுக்கும் அரச தரப்பு படையினருக்கும் இடையில் கடும் மோதல் நிலவியதால் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சவுதி அரேபியா தமது பிரஜைகளுக்கு இலங்கைக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு கட்டுப்பாடு விதித்திருந்தது.
எனினும் தற்போது இலங்கையில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்றதால் அந்த நாடு விதித்திருந்த கட்டுப்பாட்டைத் தளர்த்த நடவடிக்கை எடுத்ள்ளதாக இலங்கை தூதரகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply