ரணிலுக்கு எதிராக கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிராக ஐ.தே.க. ஆதரவாளர்கள் கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட முன்னாள் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், மூதூர்த் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப்பிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஐ.தே.கட்சி தலைவருக்கெதிரான கோஷமிட்டு பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்தனர். இதன் போது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கென பயன்படுத்தப்படவிருந்த சுவரொட்டிகள், பெரிய கட்டவுட்களும் தீ வைத்து எரிக்கப் பட்டன. பிரதான வீதியூடாகச் சென்ற இப் பேரணியினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்திற்குள் புகுந்து சேதப்படுத்தினர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் கருத்து தெரிவிக்கையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஐ.தே. கட்சி தலைமைப் பீடம் தனக்கு அநீதி இழைத்துள்ளதாகவும் ஐ.தே.க. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் பயனளிக்க வில்லை.
இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இங்கு ஆதரவாளர்களால் நேற்று காலை ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கொடும்பாவி கட்டி செருப்பு மாலை போட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply