பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது அமெரிக்கா

இந்தியாவுடன் மேற்கொண்டது போன்ற அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் செய்து கொள்ள மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் பி.டி.ஐ.க்கு அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அந்நாட்டுடன் விவாதித்து வருகிறோம். எனினும், பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை” என்றார்.

இதுபற்றி பாகிஸ்தான் அரசியல் தலைவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மட்டுமான சிறப்பு ஒப்பந்தம் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply