வங்கக் கடலில் புயல் சின்னம்; கிழக்கில் சூறாவளி அபாயம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சூறாவளி வீசக்கூடிய சாத்தியமிருப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. மட்டக்களப்பிலிருந்து 650 கிலோமீற்றர் கடல் தூரத்திலேயே இந்தப் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்து வரும் ஓரிரு தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்வதுடன் கடல் கொந்தளிப்பம் ஏற்படலாம்.
கடந்த வியாழக்கிழமை பகல் 2.30 மணியளவில் உருவான இந்த புயல் சின்னம் மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply