ஏ32 நெடுஞ்சாலையின் ஐந்தாவது பொலிஸ் நிலையம் பூனகரியில் திறக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூனகரி பகுதியில் சிவில் நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு புதிய பொலிஸ் நிலையம் ஒன்று பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. வன்னிப்பிரதேசம் விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருப்பதையடுத்து அப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கை அமுல்ப்படுத்தும் முகமாக அரசாங்கம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மன்னார் மாவட்;டத்தின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் எல்லைப்புறத்திற்கு சற்று அப்பால் அமைந்திருக்கும் பூனகரி பிரதேசமானது  கிளிநொச்சி மாவட்ட நிர்வாக அலகிற்கு உட்பட்டிருக்கின்ற போதும் பொலிஸ் நடவடிக்கையின் பொருட்டு அது மன்னார் மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்டிருக்கின்றது.

மன்னார் பூனகரி சங்குப்பிட்டி பிரதான வீதியான ஏ32 பாதையில் பூனகரி வாடியடிச் சந்திக்கருகாமையில் நேற்றுமாலை (28.03.2010) பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவினால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது பொலிஸ் நிலையம் இதுவாகும்.

 உலங்கு வானூர்தி மூலமாக பூனகரி மகா வித்தியாலயத்தில் வந்திறங்கிய பொலிஸ்மா அதிபர் பொலிஸ் வாகனத் தொடரணி மூலம் அழைத்துவரப்பட்டு காலாச்சார ரீதியாக கௌரவிக்கப்பட்டார். போலிஸ்மா அதிபர் பூனகரி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகருக்கான அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்துவைத்தார். இதன்பின் அவருக்கு பொலிஸ் மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உதவிப் பொலிஸ் அத்தியேட்சகருக்கான அலுவலகத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் பூனகரி பொலிஸ் நிலையத்திற்கான பெயர் பலகையையும் பொலிஸ்மா அதிபர் திரை நீக்கம் செய்து வைத்தார். நேற்று இடம்பெற்ற பொலிஸ்நிலைய திறப்பு விழா நிகழ்வில் பிரதேசத்தின் 66ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி பிரிகேடியர் கொடித்துவக்கு உள்ளடங்கலாக இராணுவ அதிகாரிகள், அப்பகுதிக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரிகள் பூனகரி உதவி பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், ஏராளமான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply